Tuesday, January 27, 2015

வெளிநாட்டுக்கு கிளம்பிட்டீங்களா அப்போ இந்த 10 விதமான எண்ணங்களை உங்கள் மனதினில் வைத்துக்கொள்ளுங்கள்!



1. எந்த நாட்டுக்கு செல்கிறீர்களோ அவர்களின் சொந்த நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். உதாரணமாக சிங்கப்பூரில் எச்சில் துப்புவது  சட்டப்படி குற்றமாகும். 



2. அவர்கள் நாட்டுக்கலாச்சாரம்  உங்களுக்கு புதுமையானதே! ஆகையால் அவர்களது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதித்துநடக்க பழகிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அவர்களது பாரம்பரிய உடைகளை அணியவும், அவர்கள் சாப்பிடும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றலாம்.


3.  அவர்களது தாய்மொழியினில் பேச கற்றுக்கொள்ளுங்கள்.


4. எப்பொழுதும் சொந்த நாட்டுக்கு திரும்பும்வரை முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும். உதாரணமாக, பாஸ்‌போர்ட் நகலை உங்கள் கூடவே வைத்துகொள்ளவும், மேலும் ஒரு நகலை வீட்டில் உள்ள கைப்பெட்டியில் வைத்துக்கொள்ளவும். மேலும் அங்குள்ள தூதரக (Embassy) முகவரியினை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.

5. அந்த நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலைகேற்றவாறு உங்கள் உடல்நிலையை பரிசோதித்துக்கொள்ளவும்.



6. நீங்கள் வசிக்கும் நகரத்தை பற்றிய செய்திகளையும், பக்கத்து நாட்டின் செய்திகளையும் உடனக்குடன் அறிந்து கொள்வது அவசியம்.






7. உங்கள் உடமைகளை பாதுகாக்ககெட்டிக்காரர்களாக இருந்துகொள்ளுங்கள்!

8. எப்பொழுதும் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள்! போன் பேசினால் நிறைய செலவாகுமே என்று யோசிக்க வேண்டாம்!

9. உங்கள் பயணநாட்கள் அதிகமானதாக இருந்தால் பயணத்திற்குண்டான சலுகைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்!


10. வெளிநாட்டுக்கு செல்வது வாழ்வின் ஒரு முறையேனில், உதாரணமாக தாய்லாந்துக்கு சென்றால் யானை சவாரி, துபாய்க்கு சென்றால் மணல்குன்றில் சவாரி செய்ய மறக்காதீர்கள்! வாழ்க்கையை சந்தோசமா வாழ கத்துகோங்கப்பா!

உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தயவுசெய்து இந்த நகலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment